நாட்டில் சடுதியாக அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!

பச்சை மிளகாயின் ஒரு கிலோ சில்லறை விலை மீண்டும் ரூ.1,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மையத்தில், பச்சை மிளகாயின் மொத்த விலை ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது.

சமீபகாலமாக பச்சை மிளகாய் அறுவடை குறைந்திருப்பதே, விலை உயர்வுக்கு காரணமாகும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலையும் ரூ.600 ஆக உயர்ந்துள்ளதாக தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலைமையால், பொதுமக்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.