நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கையில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், “எந்தவொரு காரணத்தினாலும் நாடு எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகாது. எரிபொருள் எங்கிருந்து வருகிறது என்பதே முக்கியமானது. அதைப் பார்த்த பிறகு, போர் தாக்கம் இருக்கிறதா என்பதை மதிப்பீடு செய்யலாம்” என அவர் கூறினார்.
மேலும், சட்டவிரோதமாக எரிபொருள் கையிருப்பு வைப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், ஒக்டேன் 92 பெற்றோல் பெரும்பாலும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும், ஓமானிலிருந்து மட்டும் ஒரு இறக்குமதி நிகழ்ந்துள்ளதாகவும், அதனால் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும் ராஜகருணா தெரிவித்தார்.