நாட்டில் ஜூலை முதல் நடைமுறைக்கு வரவுள்ள தடை!

இலங்கையில் ஜூலை 1ஆம் திகதி முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது தடை செய்யப்படும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

மேலும், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்படும் என்றும் கூறினார்.

அதற்கமைய, இது தொடர்பான சட்ட ஒழுங்கு விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்குப் பரப்பும் செயற்திட்டம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, சிறுவர்கள் உரிமைகள் மற்றும் கல்வி பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானமாகக் கருதப்படுகிறது.