செம்மணி போராட்டக் களத்துக்கு வருகை தந்த ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ; மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி


யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு பகுதியில் நடைபெற்று வந்த போராட்டக் களத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில், செம்மணி மனிதப்புதைகுழி பகுதியில் மலர் தூவி, கற்பூர தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். 

 

மேலும், போரத்தில் காணாமல் போன உறவுகளை நாடி போராடிய குடும்பங்களின் குறைகள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

இந்நிலையில், காணாமல் போனோரின் நினைவிடம் என அறியப்படும் அணையா விளக்கு பகுதியில் அவர் நிகழ்த்திய அஞ்சலியும், உரையாடலும், நீண்ட காலமாக நீதியை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு ஒரு முக்கியமான நிமிடம் என்றே கூறலாம்.



இலங்கையில் மனித உரிமை சூழ்நிலை குறித்து ஐ.நா. உயர்மட்ட ஆய்வின் ஒரு பகுதியாக இந்த விஜயம் இடம்பெற்றது.