நாட்டு மக்களுக்கு பலத்த காற்று மற்றும் மழை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (11) பிற்பகல் 2.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாகவும் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடிய பலத்த காற்றினாலும் கடல் பகுதிகளில் கடும் கொந்தளிப்பு ஏற்படுமெனவும் இதனால் சிலாபம் முதல் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை வரையும் காலி முதல் ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரையான பாதிக்கப்படும் கடலோர பகுதிகளாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடற்சார் மற்றும் மீனவ சமூகங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை பயணிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் இந்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.