இன்று இடம்பெற்ற அகமதாபாத் விமான விபத்தில் 133 பேர் உயிரிழப்பு; மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி பயணித்த போயிங் 787-8 விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, Air India விமானப் போக்குவரத்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், விமானத்தில் மொத்தம் 242 பயணிகள் இருந்ததாகவும், அதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரித்தானிய பிரஜைகள், 7 பேர் போர்த்துகீசியர் மற்றும் 1 கனடியர் ஆகியோர் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.