இலங்கையில் 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய அரசு நடவடிக்கை!

2009ம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்டு இதுவரை புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்வதை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

இது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களத்தினால் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களமே முழுப் பொறுப்பாக செயல்படவுள்ளதுடன், விரைவில் இதுபற்றி தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ளனர். இதில் 4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் 2009க்கு முந்தைய அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ளனர். இவர்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கனரக வாகன ஓட்டுநர் அனுமதிகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றை புதுப்பிப்பது கட்டாயமல்ல.

இந்நிலையில், 2009க்கு முந்தைய அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்து, புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் திட்டத்தினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.