இலங்கையில் தேங்காய் உற்பத்தியில் அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் 477 மில்லியன் தேங்காய்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டிருந்த போதும் 2025ஆம் ஆண்டில் 555 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள தேங்காய் ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் அஜித் ஜெயவீர, பல்வேறு பருவநிலை காரணிகள் மற்றும் பண்ணையர்களின் அதிக ஈடுபாட்டினால் உற்பத்தி அளவு உயர்வு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை