தங்கநகை வாங்க விரும்புவோருக்கு மேலும் மகிழ்ச்சி தகவல்!

தற்சமயம் நாட்டில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்து வரும் சமயத்தில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதற்கமைவாக, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது  964,260 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,020 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 272,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,190 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 249,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 29,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 238,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

மேலும், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 260,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.