ஆசியாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் அலை!
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகத்தை உலுப்பிய கொரோனா வைரஸ் தொற்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசியாவில் புதிய அலையுடன் பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில், புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் சிங்கப்பூரில் மட்டும் கடந்த சில வாரங்களில் தொற்று 28% அதிகரித்துள்ளது. தற்போது 14,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார நிபுணர்கள் திடீரென ஏற்பட்டுள்ள இச்சூழ்நிலையில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதன் தாக்கம் சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளுக்கும் பரவக் கூடும் என அதிர்ச்சி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சீன அரசாங்கம் தற்போதும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.