அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இன்றைய தினம் (22) மே மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இக்கொடுப்பனவானது 14 இலட்சம் பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் அரசாங்கம் இதற்காக 11 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.  

அத்துடன் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் மே மாதத்திற்கான கொடுப்பனவை பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ், தகுதியான குடும்பங்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கப்படும் என்பதுடன், திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது.