நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு!

இலங்கையில் கடந்த வாரங்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டுக்கு இன்று (22) தீர்வு கிடைக்கும் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உப்புக் கூட்டுத்தாபனம் மூலமாக, இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து 2800 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  

இந்த உப்பு இன்று நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதனால், மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் உப்புக்கான தட்டுப்பாடு குறையும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறித்த உப்புக்கப்பல் ஆரம்பத்தில் மே 21ஆம் திகதி வரவிருக்க வேண்டும் என்ற போதிலும், பல்வேறு காரணங்களால் தாமதமாக இன்று நாட்டை அடைவதாக கூறப்படுகிறது. 

அதன்படி, மிக விரைவில் உப்பு கிடைப்பதில் நிலவும் சிக்கல்கள் தீரும் என்று அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.