இலங்கையில் மூடப்படும் பெரும் தொழிற்சாலை

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் இயங்கிய நெக்ஸ்ட் (NEXT) ஆடை உற்பத்தி தொழிற்சாலை,100 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக பதில் தொழிலாளர் அமைச்சர் மகிந்த ஜெயசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையால், 1416 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.  தொழிற்சாலை மூடப்பட்டதற்கான காரணம், வணிகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.  

அத்துடன், தொழிலாளர் திணைக்களம் ஊழியர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. மற்ற நிறுவனங்களில் 1900 பணியிடங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

மேலும் அரசாங்கம் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சட்டப்படி நியாயமான அல்லது அதிக இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்தத் தொழிற்சாலை மூடல், இலங்கையின் முதலீட்டு களத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்தாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.