அரச பேருந்து டிப்பருடன் மோதி ஏற்பட்ட கோர விபத்து!

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில் இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் பயணியர் பேருந்து ஒன்று முன்னால் சென்ற டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இந்த பேருந்து மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் 12 பேருந்து பயணிகள் மற்றும் டிப்பர் ஓட்டுநர் காயமடைந்ததுடன் ஒரு பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவரது உடல் தங்காலை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

தங்காலை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.