இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் எதிர்பார்க்கப்படும் கடும் மழை வீழ்ச்சி!
இன்று, இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் சாத்தியம் உள்ளது. இது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடுமெனவும் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.