இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
தேசிய கல்வியிற் கல்லூரிகளுடன் (National Colleges of Education) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் (Teachers' Training Colleges) இணைத்து ஒரே கட்டமைப்பில் பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் 8 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராகம கல்லூரியானது பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு 150 பயிற்சியாளர்களுக்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தேசிய கல்வியிற் கல்லூரிகளுடன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் இணைத்து ஒரே கட்டமைப்பில் பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு 2,175 பயிற்சியாளர்கள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விடுதி வசதிகள் உள்ளிட்ட ஆதரவுத் தேவைகள் பூர்த்திக்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மேலும் தெரிவித்ததாவது, இத்திட்டம் மூலம் ஆசிரியர்களின் திறமை வளர்ச்சி, தோன்றும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளித்தல், மற்றும் கல்வி தர மேம்பாடு ஆகியவை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார்.