யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழையின் தீவிரமாதலால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்தி இன்று (27) பிற்பகல் 12:30 மணி முதல், நாளை (28) பிற்பகல் 12:30 மணி வரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் மணிக்கு 50–60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் மிகவும் கொந்தளிப்பு நிலை கொண்டிருக்கும். சில இடங்களில் அலைகளின் உயரம் 2.5மீ 3.0மீ வரை அதிகரிக்கக்கூடும்.

மீனவர்கள் மற்றும் கடற்படை உறுப்பினர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மறு அறிவித்தல் வரை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வளிமண்டலவியல் திணைக்கள அறிவிப்புகளை கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.