கொரோனா தொற்றால் சென்னையில் ஒருவர் பலி; இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
புதிய கொவிட்-19 திரிபால் உருவாகும் உலகளாவிய அச்சுறுத்தலை முன்னிட்டு, இலங்கை சுகாதார அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது.
இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்ததாவது, PCR பரிசோதனைகள் சில முக்கிய மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன. காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமையை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கிறது. தற்போது எந்தவொரு கட்டுப்பாடுகளும் உடனடியாக அமல்படுத்தப்படமாட்டாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, சென்னையில் ஒரு நபர் புதிய கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளார், என தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தி, பிராந்திய சுகாதார அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து, நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படுவதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.