கொரோனா குறித்து பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு!


இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரிக்கும் வேளையில், ‘ஜப்பானின் பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகி எழுதிய தீர்க்கதரிசனம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1999 ஆம் ஆண்டு வெளியான “The Future As I See It” என்ற புத்தகத்தில், அவர் 2020ல் மர்ம வைரஸ் ஒன்று உருவாகி, 2030ல் மீண்டும் மோசமான தாக்கம் அளிக்கும் என எழுதியிருந்தார்.

தற்போது இந்தியாவில், குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்க்கதரிசனம் மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ராஜீவ் பெல், தற்போது பரவும் வைரஸ் Omicron குடும்பத்தைச் சேர்ந்ததாகவும், அதில் LF.7, XFG, JN.1, NB.1.8.1 போன்ற மாற்று வடிவங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய காலங்களில் பாபா வங்கா COVID-19, இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மற்றும் ஃபிரெடி மெர்குரியின் மரணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளை கணித்ததாக கூறப்படுகிறது.

மேலும், 2025 ஜூலை மாதத்தில் ஜப்பான்–பிலிப்பைன்ஸ் இடையே கடலுக்கு கீழ் நிலநடுக்கத்தால், 2011 சுனாமியை விட மூன்று மடங்கு பெரிய சுனாமி ஏற்படும் என அவர் கணித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2030ல் கோவிட் மீண்டும் மோசமாக பரவலாம் என்ற அச்சம் சமூகத்தில் உருவாகியுள்ளது.