நாட்டில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் "ஆம்பர் நிற" எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (31) காலை 8.00 மணி வரை செல்லுபடியாகும். இயங்குநிலை தென்மேற்குப் பருவமழையின் காரணமாக தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை நிலைமை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ.-க்கும் அதிகமான மழை பெய்யலாம்.
நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 30–40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனை முன்னிட்டு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:
இலங்கை