கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த 24 மணி நேரத்திற்குள் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை இன்றுடன் (மே 29) நிறைவடைகிறது என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜூன் 2, 2025 முதல் இந்த ஒருநாள் கடவுச்சீட்டு சேவைக்கு விண்ணப்பங்கள் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பத்தரமுல்லை தலைமை அலுவலகத்தில் ஏற்கப்படும்.
முன்பதிவு செய்தவர்கள் மற்றும் அவசர தேவையுடைய விண்ணப்பதாரர்களுக்கும் இந்த சேவையின் கீழ் சலுகை வழங்கப்படும்.
அதோடு, வழக்கமான கடவுச்சீட்டு சேவைக்கான விண்ணப்பங்கள் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் வழமைபோல் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஏற்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை