2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி
2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 27ஆம் திகதி வெளியான இவ்வறிவிப்பில், 2026 ஆம் ஆண்டின் விடுமுறைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இது, 1971 ஆம் ஆண்டு விடுமுறைச் சட்டத்தின் (அடையாள எண் 29) பிரிவு 04 இன் கீழ், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின் அடிப்படையில், அனைத்து அரச மற்றும் வங்கி நிறுவனங்களும் அவ்வேளைத் தீர்மானிக்கப்பட்ட விடுமுறைகளைக் கடைபிடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை