இலங்கையில் தங்கநகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! ஒரே நாளில் இரு தடவைகள் அதிகரித்த தங்க விலை

இன்று (22.04.2025) உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு மைல்கல் அடித்துள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க வகையில் பிரதிபலித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, இன்று நண்பகலுக்குப் பின்னர் தங்கத்தின் விலை ரூ.2,000 மூலம் உயர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் தற்போதைய விலை நிலவரம் பின்வருமாறு: 24 கரட் தங்கமானது ரூ.279,000 (ஒரு கிராம் – ரூ.34,875) ஆகவும்22 கரட் தங்கமானது ரூ.256,000 (ஒரு கிராம் – ரூ.32,000) ஆகவும் 18 கரட் தங்கமானது ரூ.210,000 (ஒரு கிராம் – ரூ.26,250) ஆகவும் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக பதற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பான சொத்துகளுக்கான விருப்பம் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு முடிவுகளை சிந்தித்துத் திட்டமிடுமாறு வியாபாரிகள் பரிந்துரை செய்து வருகின்றனர்.