கொழும்பில் அதிகாலை படுகொலை: ஒருவர் பலி!

கொழும்பு - வெல்லம்பிட்டி, சாதம்வத்த பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த குழுவினரால் கூர்மையான தாக்குதலுக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை இன்று (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிராண்ட்பாஸ், சாதம்வத்த, ஒருகொடவத்த பகுதியை சேர்ந்த ஒருவரே வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத குழுவினால் கொலை செய்யப்பட்டுள்ளார்

இவ்வாறு உயிரிழந்தவர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,

மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.