அச்சுவேலியில் மாடு கடத்திய நபர் கைது: 9 மாடுகள் மீட்பு - பொலிஸார் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வீரவாணி பகுதியில் மாடுகளை கடத்திய ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை கடத்தி சென்ற வேளை காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் காங்கேசன் துறை குற்ற தடுப்பு பிரிவினரால் மாடுகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் மாடுகளுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கைதானவர் நாளைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
Tags:
இலங்கை
