இலங்கையில் இன்று இரண்டு முறை உயர்ந்த தங்கத்தின் விலை

இன்று (13) நண்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.336,000 ஆக விற்பனையாகிய நிலையில், பிற்பகல் பின்னர் அது மேலும் ரூ.4,000 அதிகரித்து, ரூ.340,000 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், 24 மணி நேரத்திற்குள் தங்கத்தின் விலை ரூ.14,000 உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், தற்போதைய விலை நிலவரப்படி:  

- 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.340,000  

- 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.314,500  

- 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.42,500  

- 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.39,313  

என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.340,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.314,500 ஆகும்.

இதன்படி,  

- 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.42,500  

- 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.39,313  

என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.