நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு.. ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் அவருடன் இருந்த 3 பேர் கைது!
நடிகை லட்சுமி மேனன் தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் உள்ள ஒரு பாரில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, ஒரு ஐடி நிறுவன ஊழியர் காரில் கடத்தி தாக்கப்பட்ட சம்பவத்தில், லட்சுமி மேனன் உடன் இருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அண்மையில் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவரை காரில் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவருடன் இருந்த மூவர் இணைந்து, குறித்த ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லட்சுமி மேனன் தற்போது தலைமறைவாக இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தாக்கப்பட்ட ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகை லட்சுமி மேனனுடன் இருந்த மிதுன், அனீஷ் மற்றும் இன்னொரு பெண் ஆகிய மூவரை எர்ணாகுளம் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் லட்சுமி மேனனை விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை விசாரணைக்கு அழைத்த நிலையில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுத்துவரும் போலீசார், தற்போது அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், லட்சுமி மேனனுடன் இருந்த பெண் அளித்த புகாரின் பேரில், எதிர்தரப்பைச் சேர்ந்த ஒரு நபருக்கும் எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய 'ரகுவின் சொந்தம் ராசியா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான லட்சுமி மேனன், அதனைத் தொடர்ந்து தமிழில் 'கும்கி', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து, தெலுங்கிலும் சில படங்களில் நடித்த லட்சுமி, நடிகர் விஷாலுடன் இரு படங்களில் நடித்ததோடு, 'வேதாளம்' படத்தில் நடிகர் அஜித்திற்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.
27 வயதான லட்சுமி மேனன் தற்போது அதிகமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்துவருகிறார். இந்த ஆண்டு மார்ச்சில் வெளியான 'சப்தம்' திரைப்படத்தில் தான் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இவர் ஒரு சர்ச்சைக்குள்ளாகியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.