பிற்பகலில் ரணிலின் வழக்கு: 300 சட்டத்தரணிகள் முன்னிலையில்! பரபரப்பான சூழ்நிலையில் தென்னிலங்கை
இன்று (26) பிற்பகல் 1.00 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரை கைது செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், உடல் சுகயீனம் காரணமாக அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் சுமார் 300 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அவரது வழக்கை விசாரணை செய்யும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பெரும் பொலிஸார் படை குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், தென்னிலங்கைப் பகுதிகளில் இன்று பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது.