தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்து; 15 பேருக்கு நேர்ந்த கதி
ஹூங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
திஸ்ஸ–மாத்தறை பிரதான வீதியில், மாத்தறையிலிருந்து மஹல்வெவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், ஹம்பாந்தோட்டையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை
