ஒரே நாளில் மீண்டும் உச்சந்தொட்ட தங்கத்தின் விலை!

நாட்டில் நேற்று (11) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு ரூ.7,000 எனக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்த நிலையில், இன்று (12) மேலும் ரூ.1,000 உயர்ந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரத்தைப் பொருத்தவரை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.326,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.301,500க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.40,750 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.37,688 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.