இலங்கையில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி
எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் புதிய முறை, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்களை செலுத்திய பின்பு மீதமுள்ள பணத்தை வழங்காதது கடந்த காலங்களில் ஒரு பெரிய சிக்கலாக இருந்தது. இதற்கான தீர்வாகவே, வங்கி அட்டை மூலம் நேரடியாக கட்டணங்களை செலுத்தும் முறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத்திடத்தின் இரண்டாவது வாசிப்பில் பங்கேற்றபோது, அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தனது அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் ஏற்கனவே முக்கியமான வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர், தற்போது LankaPay - GovPay வசதியின் மூலம் பில்லியன் கணக்கான ரூபாய்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன எனவும், இதன் மூலம் நாட்டின் பணமுழக்கம் மற்றும் நிதி மேலாண்மை மேலும் திறம்பட முன்னேறி வருகின்றதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
