அததியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!


அத்தியாவசிய பொருட்களில் சிலவற்றின் விலைகள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 19% அளவில் குறைந்துள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

நுகர்வோர் பொதுவாக அடிக்கடி வாங்கும் 40 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தான் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

இந்தத் தகவலை, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறித்த பொருட்களில் பெரும்பாலானவை வீட்டுப் பயன்பாட்டுக்கான அத்தியாவசிய பொருட்களாகும்.  

நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் பொருட்கள் எவை என்பதை அரசாங்கம் தெளிவாக அடையாளம் கண்டுள்ளதுடன், அவற்றின் விலைகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, இத்தகைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும் துரித நடவடிக்கைகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.  

இதன் தொடர்ச்சியாக தற்போது 55 முதல் 60 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.  

மக்களின் வாழ்வுச் சுமையை குறைக்கும் நோக்குடன் இந்த விலை குறைப்புகள் செய்யப்படுவதாகவும், பொருட்களின் விலைகளை மேலும் குறைக்கும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.