இலங்கையின் பல பகுதிகளில் பகல் 1.00 மணிக்கு பின் மழை பெய்யும் வாய்ப்பு!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (08.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டலவியல் திணைக்களம், பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
எனவே, வானிலை மாற்றத்திற்கேற்ப அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள சில பகுதிகளில் 75 மி.மீ. க்கும் அதிகமான ஓரளவான பலத்த மழைவீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் காலை வேளைகளில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசவும், மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடிய நிலையில், இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
