அரச வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
அரசாங்க வேலைவாய்ப்புக்காக 60,000 பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி செயலமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நோக்கில் தேவையான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, முதல் கட்டமாக நாடளாவிய ரீதியில் தேவையான சேவைகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், பொது சேவைக்கான நிலையான நடைமுறைகளுக்கிணங்க முறையாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முதற்கட்டமாக நாடு முழுவதும் தேவையான சேவைகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சேர்ப்பு, பொது சேவைக்கான ஒழுங்குமுறை மற்றும் நிலையான நடைமுறைகளின்படி முன்னெடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
