க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு, பாடசாலை விண்ணப்பதாரர்கள் 246,521 பேரும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 94,004 பேரும் இணைந்து, மொத்தமாக 340,525 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
அத்துடன், இம்முறை உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து தனியார் வகுப்புகள், பாடத்திட்டங்களை முன்வைத்து நடத்தப்படும் கருத்தரங்குகள், விரிவுரைகள், செயலமர்வுகள், மற்றும் ஊகக் கேள்வித்தாள்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து விளம்பர நடவடிக்கைகளும், நாளை (04) நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சைக்கான பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்னும் அனுமதி அட்டை பெறாத விண்ணப்பதாரர்கள், இன்று முதல் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று தங்களின் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில், மாணவர்கள் தற்போது பாடத்திட்டத்தை முடித்து பரீட்சைக்காக தீவிரமாக தயாராகிக்கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்கள் நல்ல மனநிலையுடன் அமைதியாக பரீட்சைக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், வினாத்தாள்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல், கடந்த வருடத் தரத்திலேயே இந்த ஆண்டும் பரீட்சைகள் நடைபெறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, மாணவர்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை கால அட்டவணைக்கு ஏற்ப, பரிசுத்தமாகவும் கவனமாகவும் தயாராகி, நல்ல மனநிலையுடன் மற்றும் அமைதியாக வினாத்தாளை முழுமையாக வாசித்து, பதில்களை தெளிவாகவும் ஒழுங்காகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் முயற்சி சிறந்த முடிவுகளைத் தரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
பெற்றோர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, இது பிள்ளைகளின் பாடசாலை வாழ்க்கையின் இறுதி ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான பரீட்சை என்பது ஆகும்.
எனவே, இந்த பரீட்சையின் போது பிள்ளைகள் அழுத்தம் இல்லாமல், மனநிலை சீராகவும் அமைதியாகவும் பரீட்சையை எதிர்கொள்ள வீட்டின் சூழலையும் நன்கு தயார் செய்து, பிள்ளைகளுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்காமல், பரீட்சைக்கு உகந்த, சாந்தியான சூழலை உருவாக்குமாறு அன்பான பெற்றோர்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
