வடக்கில் தென்னை விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் தென்னை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30,000 மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, தென்னை சாகுபடி சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

புதிதாக பயிரிடப்படும் தென்னை நிலங்களுக்கு தேவையான நீர் வசதிகளை உருவாக்கும் நோக்கில், இந்த நிதி உதவித் தொகை வழங்கப்படுவதாகவும், அதன் கீழ் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தென்னை முக்கோண வலயத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டத்துடன் இணைந்து, இந்த மானியம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்தத் திட்டம், தென்னை உற்பத்தியை அதிகரிப்பதோடு நீர் வசதிகள் மேம்பாடு வழியாக நிலத்தடையை மேம்படுத்தும் நோக்கத்தையும் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் தேங்காயின் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்குடன், வடக்குப் பகுதியில் இந்த தென்னை முக்கோண வலயம் செயற்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.