நாட்டில் தங்கவிலையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

நாட்டில் இன்று (10) 24 கரட் தங்கத்தின் விலை, கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பவுண் ஒன்றுக்கு ரூ.2000ஐ உயர்ந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரத்தைப் பொருத்தவரை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.318,000 ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.294,000க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.39,750 என்றும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.36,750 என்றும் விற்பனை செய்யப்படுகின்றது.  

இதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.800 ஆகும் என இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.