இலங்கையை ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு; 50 பேர் காயம்!
அநுராதபுரம் – தலாவ வீதியில் இடம்பெற்ற கோரமான பஸ் விபத்தில், ஆரம்பத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவ்விபத்தில் 50-ஐ விட அதிகமானோர் பலத்த காயமடைந்து, உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தம்புத்தேகம, ஜெயகங்கா பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அநுராதபுரம் – தலாவ – ஜயகங்க சந்திப்பு பகுதியில் இன்று (10) பிற்பகலில் இடம்பெற்ற பஸ் விபத்தில், பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 50 பேர் வரை காயமடைந்து, அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாகவும், அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தனியார் பஸ், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
