லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

மாதாந்த விலை பரிசீலனைக்கு அமைய, நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் கூறியதாவது, லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நவம்பர் மாதம் முழுவதும் தற்போதைய நிலைபேறாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.4,100 க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை ரூ.1,645 ஆகவும் 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை ரூ.658 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள் நவம்பர் மாதம் முழுவதும் மாற்றமின்றி நடைமுறையில் இருக்கும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.