யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம், நல்லூர் – கிட்டுப்பூங்கா பகுதியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பற்றி எரிந்ததை அடுத்து, யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.