நாட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்,  அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (16) வெளியிடப்பட்டுள்ள தினசரி வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் மற்றுமுன் பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதையடுத்து,  

அத்தகைய சூழ்நிலைகளில் ஏற்படக்கூடிய சேதங்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.