இலங்கை வங்கியின் தலைமையகத்தில் நேற்றிரவு தீ விபத்து
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு (8.30 மணியளவில்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்து நேரத்தில் ஐந்தாவது மாடியில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் இருந்த போதிலும், எவரும் காயமடைந்தவர்கள் இல்லை எனவும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளனர்.
இத் தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன் சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.
Tags:
இலங்கை
.jpeg)