2025 உயர் தர மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர் தர (GCE A/L) பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (12) நள்ளிரவுடன் நிறைவடைகிறது என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன், 2025 உயர் தர பரீட்சைகள் நவம்பர் 11ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுபாஷினி இந்தியா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்க்கும் மாணவர்கள், அத்துடன், முன்னதாக அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள், இன்று (12) நள்ளிரவு வரை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த இறுதி அவகாசம் எந்தவொரு காரணத்திற்காகவும் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது எனவும், அதற்கான சலுகை காலம் இன்று முற்றிலும் முடிவடைகிறது எனவும் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.