திருகோணமலை - பாரவூர்தி மோதி விபத்து

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் ஏற்றிய சிறிய ரக கெண்டருடன் ஒரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று புதன்கிழமை (13) அதிகாலை 12.30 மணியளவில் திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில், பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றிய கெண்டருடன் பாரவூர்தி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று, இன்று (13) அதிகாலை 12.30 மணியளவில், ஈச்சிலம்பற்று – பூமரத்தடிச்சேனை பகுதியில் வீதியில் நெல் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ஹெண்டர் வாகனத்தில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்து நேரத்தில் நெல் ஏற்றும் வாகனத்தில் யாரும் இல்லாததால், எவருக்கும் உடல்பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு வாகனங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன, மேலும், பாரவூர்தியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் தான் விபத்துக்கான முக்கிய காரணமாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ் விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  எனினும், இரண்டு வாகனங்களும் பெருமளவு சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.