தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் இடையில் மாறுபடுவதாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்றைய (19) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 1,006,015 ஆக நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் 1 கிராம் - ரூ. 35,490 ஆகவும் 1 பவுண் (8 கிராம்) - ரூ. 283,900 ஆகவும் பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கம்  1 கிராம் - ரூ. 32,540 ஆகவும் 1 பவுண் (8 கிராம்) - ரூ. 260,300 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் 1 கிராம் – ரூ. 31,060 ஆகவும் 1 பவுண் (8 கிராம்) – ரூ. 248,450 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், உலக சந்தை நிலவரத்தின் அடிப்படையில், இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூ. 1,004,537ஆக பதிவாகியுள்ளது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கத்தின் தற்போதைய விலை ஒரு அவுன்ஸுக்கு அமெரிக்க டொலர் $3,331.49 என காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை சுடுசுடு புதுப்பிப்புடன் சடுதியுடன் மாறி வரும் நிலையில், இது முதலீட்டாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.