நாட்டில் பல தொடருந்து சேவைகள் திடீர் இரத்து!
தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர கரையோர மார்க்கத்தில் இயக்கப்படும் பல தொடருந்து சேவைகள், நாளை (24) ரத்து செய்யப்படும் என தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா அறிவித்துள்ளார்.
இதற்கான காரணமாக, குறித்த மார்க்கத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை (24.08.2025) இரத்து செய்யப்படவுள்ள தொடருந்து சேவைகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
கடலோர கரையோர மார்க்கத்தில் நடைபெறவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை காரணமாகக் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலி தொடருந்து நிலையத்திலிருந்து காலை 05.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்குப் புறப்படவிருந்த தொடருந்து (எண் 8319) நாளை (24.08.2025) இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து நண்பகல் 12.10 மணிக்கு காலிக்குப் புறப்படவிருந்த தொடருந்து (எண் 8788) மற்றும் அதன் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24.08.2025 அன்று திருத்தப்பட்ட தொடக்க நேரங்களுடன் இயக்கப்படவுள்ள தொடருந்துகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலி தொடருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்குப் புறப்படவிருந்த தொடருந்து எண் 8327 (சமுத்திரதேவி), சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 06.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும். மேலும், காலி தொடருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 04.10 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்படவிருந்த தொடருந்து எண் 8320, காலை 08.50 மணிக்கு பயணத்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.