இன்று ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலர் படுகாயம்
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் இன்று (15) காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து நேரத்தின் போது பேருந்தில் 30 பேர் பயணித்திருந்ததுடன், அவர்களில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்தின் பிரேக் செயலிழந்ததையே இந்த விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Tags:
இலங்கை