மின்னேரியாவில் பேருந்து விபத்து – 26 பேர் காயம்
மின்னேரியாவில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து அதிகாலை 3 மணியளவில், கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று, அதற்கு முன்னால் சென்ற டிப்பர் லொறியுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து தொடர்பாக மின்னேரியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.