யாழில் திடீர் கடும் மழையால் பலர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்று (11) காலை திடீரென ஏற்பட்ட கடும் மழையால், 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/351 கிராம சேவகர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், J/363 பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், J/364 பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் முதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

அத்துடன், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் மொத்தமாக, 7 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 34 பேர் கடந்த (11)ஆம் திகதி பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால உதவிகள் வழங்கப்படுவதுடன், தொடர்ந்தும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.