கொழும்பு - யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை இடையிலான சொகுசு ரயில் சேவை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

இன்று (07) முதல் கொழும்பு - யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை இடையிலான சொகுசு ரயில் சேவை நாளாந்தமாக இயங்கும் வகையில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து ரயில் தினசரி காலை 5.45 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், காங்கேசன்துறையிலிருந்து மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த சொகுசு ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்பட்டிருந்தது. தற்போது இது தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளதால், யாழ்தேவி ரயில் சேவை காலை 6.40 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.